கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகரிப்பு

பொதுமுடக்கம் 14 ஆம் திகதிவரை நீடிப்பு- அரசாங்கம் அறிவிப்பு

அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு
பதிப்பு: 2021 ஜூன் 02 21:47
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 02 23:13
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#coronavirus
இருவாரங்களாக அமுல்படுத்தப்பட்டிருக்கும் பொது முடக்கம் எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படுமென எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுபாடு என இலங்கை அரசாங்கத்தால் கூறப்படும் இந்த பொதுமுடக்க அறிவிப்பு, 14 ஆம் திகதிவரை நீடிக்கப்பட வேண்டுமென சுகாதார சேவை அமைப்புகள் விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப நீடிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகின்றது.
 
பொது முடக்க நீடிப்புத் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட கொரோனா ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைமை அதிகாரி இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, அத்தியாவசிய உணவுப் பொருட்கள், நடமாடும் சேவைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படுமென்று கூறினார்.

அதேவேளை. பொதுமுடக்க அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி பெறும் தொழிலாளர்களுக்கும் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள தனியார்துறை ஊழியர்கள் மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கும் அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.