கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு கிரானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்திய பத்துப்பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் விசாரணை தொடர்கிறது
பதிப்பு: 2021 ஜூன் 03 22:25
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 04 02:51
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்திய 10 பேரையும், எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு, இலங்கை ஒற்றையாட்சி அரசின் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் 18 ஆம் திகதி இவர்கள் நினைவேந்தல் நிகழ்வை நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
வழைச்சேனை கிரான் கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வை நடத்திய குற்றச்சாட்டில் ஏற்பாட்டாளரான குருசுமுத்து வி.லவக்குமார் என்ற குடும்பஸ்தரும் மற்றும் இரு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கல்குடா பொலிஸாரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர்.

வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற உத்தரவுடன் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்தப் பத்துப்பேரும் மீண்டும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது இவர்களை மேலும் விசாரிக்கக் கால அவகாசம் தேவையெனப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். இதனால் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை தடுத்து வைக்குமாறும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்லைப்படுத்தும்போது குற்றங்கள் நிரூபிக்கப்பட வேண்டுமெனவும் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுகள் மூலம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை இலங்கை அரசாங்கம் தடுக்க முற்பட்டபோதும், வடக்குக் கிழக்கில் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

கிழக்கு மாகாணத்தில் இலங்கைப் பொலிஸாரும் இலங்கை இராணுவத்தினரும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.