வடமாகாணத்தில் அதிகரித்து வரும்

கொவிட் தொற்று- முல்லைத்தீவில் ஒருவர் மரணம்

வெள்ளிக்கிழமை வரை 577 பேர் பாதிப்பு
பதிப்பு: 2021 ஜூன் 05 22:05
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 07 23:30
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
கொரொனா நோய்த் தாக்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் முறையாக கடந்த வெள்ளி இரவு ஒருவர் மரணமடைந்துள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மாணிக்கப்புரம் கிராமத்தைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்ததாக முல்லைத்தீவு மாவட்டச் சுகாதார அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். சிறுநீரகம் பாதிப்பு தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த குடும்பஸ்தர் கொரோனா நோய் தொற்றினால் மரணமடைந்ததாக மேற்படி அதிகாரி கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.
 
கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவு முள்ளியவளை மயானத்தில் குறித்த குடும்பஸ்தரின் உடல் தகனம் செய்யப்பட்டதாகவும் குறித்த சுகாதார அதிகாரி கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

இதேசமயம் கொவிட் -19 நோய் தொற்று இலங்கையில் முதன் முதலாக கடந்த 2020 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டதில் இருந்து 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 577 கொவிட் நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த 577 கொவிட் தொற்றாளர்களில் 346 பேர்கள் சிகிச்சையின் பின் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் மிகுதியான 231 நோய்த் தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக மேற்படி அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இது இவ்விதம் இருக்க மன்னார் மாவட்டத்தில் இம்மாதம் முதலாம் நேற்று நான்காம் திகதி வரை 6 கொவிட் தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வினோதன் தர்மராஜன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் கடந்த 2020 ஆண்டு முதன் முதலாக கொவிட் நோய்த் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதில் இருந்து 4ஆம் திகதிவரை 513 கொவிட்-19 நோய்த் தொற்றாளர்கள் மொத்தமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வினோதன் தர்மராஜன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் இதுவரை மன்னார் மாவட்டத்தில் கொவிட் நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டு நால்வர் மரணித்துள்ளதாகவும் மன்னார் மாவட்ட சுகாதாரப்பணிப்பாளர் டொக்டர் வினோதன் தர்மராஜன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.