நாயன்மார்க் கட்டு மனிதப் புதைகுழி மண்

நீதிபதியின் உத்தரவுக்கு அமைவாக பரிசோதனை செய்யப்படவில்லை. மேலதிக விசாரனையும் நிறுத்தம்?

பிரதேச மக்கள் சந்தேகம்
பதிப்பு: 2018 ஜூலை 24 17:00
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 25 15:19
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
யாழ்ப்பாணம் கல்வியங்காடு- நாயன்மார்க் கட்டு செம்மணி பிரதேசத்திற்கு அருகில் கண்டபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான விசாரனைகள் தெர்ந்து நடைபெறக்கூடிய வாய்ப்புகள் இல்லையென பிரதேச மக்கள் கூறுகின்றனர். இலங்கை அரசாங்கத்தின் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் ஏற்பாட்டில் இந்திய நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக, வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள கடந்த வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டிருந்தன. சென்ற சனிக்கிழமை மாலை யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி சி.சதிஸ்தரன் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரனைகளை மேற்கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைப் பொலிஸாருக்கு உத்தரவுமிட்டிருந்தார்.
 
அத்துடன் குழியில் இருந்து ஏற்கனவே வெட்டி எடுக்கப்பட்ட மண்ணையும் பரிசோதனை செய்யுமாறு கூறியிருந்தார். ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை வரை மண் பரிசோதனை செய்யப்படவில்லை.

நீதிபதியின் உத்தரவுக்கு அமைவாக மண்ணைப் பாிசோதனை செய்யாமல் விட்டமைக்கான காரணம் என்ன என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த விசாரனைகளை மூடி மறைக்க கொழும்பில் இருந்து அழுத்தம் என ஏற்கனவே சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. இலங்கைப் பொலிஸார் மீது நம்பிக்கை இல்லையென பிரதேச மக்களும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், சென்ற ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணிக்கு யாழ்.போதனா வைத்தியசாலைச் சட்டவைத்திய அதிகாரி க.மயூரன் சம்பவ இடத்திற்குச் சென்று மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை பார்வையிட்டார்.

ஆனால், யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி, யாழ் போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி க.மயூரன் சம்பவ இடத்திற்குச் செல்லவில்லை.

இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை குறித்த பிரதேசத்திற்குச் சென்ற சட்டவைத்திய அதிகாரி க.மயூரன் மீண்டும் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது இடம்பெற்ற மண் அகழ்வின்போது, எலும்புக்கூட்டின் சில பாகங்கள் மாத்தரமே மீட்கப்பட்டன. அந்த எலும்புகள் ஆணிணுடையதா அல்லது பெண்ணிணுடையதாக என்பது குறித்து அடையாளப்படுத்த முடியவில்லை.

இதனால் மேலதிக ஆய்வுக்காக எலும்புகள் அனுப்பப்படவுள்ளன. இன்று நண்பகலுடன் மனிதப்புதைகுழி தொடர்பான அகழ்வு முடிவடைந்துள்ளதாக சட்டவைத்திய அதிகாரி மயூரன் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அகழ்வு இடம்பெறுமா இல்லையா என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

1995, 96, 97 ஆம் ஆண்டுகளில் சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்தபோது குறித்த பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தின் முன்னரங்க காவலரன் இருந்ததாக பிரதேச மக்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.