கொழும்பில் உள்ள

இந்தியத் தூதுவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அபிவிருத்தி பற்றியே பேசியதாக கூறுகிறார் செல்வம் அடைக்கலாநாதன்
பதிப்பு: 2021 ஜூன் 17 23:02
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 18 02:12
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை இன்று வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்து உரையாடியுள்ளார். கொழும்பு 7 இல் உள்ள இந்தியத் தூதுவரின் அதிகாரபூர்வ இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தாத்தன், மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகப் பேசியதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் கூறியுள்ளது. வடக்குக் கிழக்குப் பிரதேசங்களின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாகவும் உரையாடியுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும் ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியா ஆதரவு வழங்குமென இந்தியத் தூதுவர் உறுதியளித்ததாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்தியத் தூதுவர் இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ் மக்கள் தும்புத் தடியாலும்கூடத் தொட்டுப் பார்க்க மாட்டார்கள் என்று சம்பந்தன் ஏலவே கூறியிரு்ந்தமை குறிப்பிடத்தக்கது.