நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்வதற்கு முன்

ராஜபக்சவை ஆட்சியில் அமர்த்திய முத்தெட்டுவ தேரரிடம் ஆசி பெற்றார் ரணில்

சபையில் ஆர்ப்பாட்டம்
பதிப்பு: 2021 ஜூன் 23 22:31
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 25 00:38
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#parliament
கோட்டபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கப் பாடுபட்ட கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள அபயராமய விகாரைக்குச் சென்று அந்த விகாரையின் பிரதம தேரர் முத்தெட்டுவே ஆனந்த தேரரிடம் ரணில் விக்கிரமசிங்க ஆசி பெற்ற பின்னரே நாடாளுமன்றத்தில் பதவி பிரமாணம் செய்துகொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன்னர் விகாரைக்குச் சென்று ஆசி பெற்றதாக கட்சியின் செயலாளர் பாலித ரங்கபண்டார தெரிவித்தார்.
 
முன்னைய காலங்களில் பிரதமராகவோ அல்லது எதிர்க்கட்சித் தலைவராகவோ பதவியேற்கும்போது கொழும்பு கங்காராமய மற்றும் கொள்ளுப்பிட்டி வாலுகாராமய விகாரைகளுக்கே ரணில் விக்கிரமசிங்க செல்வது வழமை.

ஆனால் இம்முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கும் முன்னர் ராஜபக்ச குடும்பத்தை ஆட்சிக்கு அமர்த்தப் பெரிதும் பாடுபட்ட கொழும்பு அபயராமய விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்து ஆசிபெற்றிருக்கிறார்.

முத்தெட்டுவே ஆனந்த தேரர் சமீபகாலமாக கோட்டாபய ராஜபக்சவை விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க பதவியேற்க முன்னர் சஜித் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

ஆனால் இந்த எதிர்ப்பு நடவடிக்கை ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பதற்கு எதிராகவே என்று அமைச்சர்கள் பலரும் குற்றம் சுமத்தினர்.