இலங்கைத் தீவில்

புதிய டெல்டா கொவிட் பிறழ்வு, வேகமாகப் பரவும் அபாயம்

விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை
பதிப்பு: 2021 ஜூன் 27 23:50
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 28 23:36
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#coronavirus
இலங்கைத் தீவில் புதிய டெல்டா கொவிட் பிறழ்வு, மிக வேகமாக பரவும் அபாயமுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எதிர்காலத்தில் மேலும் பிறழ்வுகள் உருவாகக்கூடும் என தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் பாரதூரமான நிலைமையை இலங்கை மக்கள் சந்திக்க நேரிடுமெனவும் கூறினார்.
 
தடுப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் உதவிகள் தொடர்பாகவும் அரசாங்கத்துடன் பேசியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கை முழுவதிலும் பணியாற்றுகின்ற சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளதாகவும் விரைவில் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

புதிய பிறழ்வுகள் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டதால், அதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்போது ஏனைய பிறழ்வுகளைக் காட்டிலும் துரிதமாக பரவக்கூடும் என விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் சுட்டி்காட்டினார்.

இதேவேளை, இலங்கையில் டெல்டா கொவிட் பிறழ்வுடன் ஐவர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.