வடமாகாணம் யாழ்ப்பாணம்

பருத்தித்துறை மருதங்கேணி வீதிப் புனரமைப்பில் ஈடுபட்ட நபர் சீனப் பிரஜை அல்ல- தூதரகம் விளக்கம்

பதிவை நீக்கினார் சுமந்திரன்- வருந்துவதாகவும் கூறிப் புதிய பதிவை வெளியிட்டார்
பதிப்பு: 2021 ஜூன் 29 21:43
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 30 02:00
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வடமாகாணம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை மருதங்கேணி வீதிப் புனரமைப்பில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட நபர் சீனப் பிரஜை அல்ல என்று தெரியவந்துள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனினால் சீனப் பிரஜை என அடையாளப்படுத்தப்பட்ட நபர், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இஸ்லாமியர் என கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் பலருக்கு வேலையில்லை என்றும், ஆனால் சீன பிரஜைகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுமந்திரன் சமூக வலைத்தளத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.
 
அத்துடன் வீதிப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அந்த நபரின் புகைப் படத்தையும் சுமந்திரன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். ஆனாலும் சுமந்திரன் முன் வைத்த குற்றச்சாட்டு ஆதாரபூர்வமற்றதென சீனத் தூதரகத்தினால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தனது அதிகாரபூர்வ ருவிட்டர் தளத்தில் சுமந்திரனின் பதிவு தவறானதெனச் சுட்டிக்காட்டியுள்ளது. சீனப் பிரஜை என்று சுமந்திரனால் அடையாளப்படுத்தப்பட்ட நபர் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் ஹனிபா என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் சுமந்திரன் சமூக வலைத்தளத்தில் உள்ள தனது பதிவை நீக்கியுள்ளார். அத்துடன் தனது பதிவு தவறானது என்றும், அதற்காக வருந்துவதாகவும் அவர் தனது புதிய பதிவில் கூறியுள்ளார்.

ஆனாலும் வடக்குக் கிழக்கில் பணியாற்றுவதாகக் கூறப்படும் சீனப் பிரஜைகள் பற்றிய விபரங்களை வெளியிடவுள்ளதாகவும் அந்தப் பதிவில் சுமந்திரன் கூறியுள்ளார்.