இலங்கைத் தீவில்

சீன ஆதிக்கம்- பாதுகாக்க பௌத்த தேரர்களுக்கு அழைப்பு

படையினரும் ஒத்துழைக்க வேண்டுமென்கிறார் சஜித் அணியின் உறுப்பினர் துஷார இந்துனில்
பதிப்பு: 2021 ஜூலை 01 21:48
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 02 01:41
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
அதிகரித்து வரும் சீனர்களின் செயற்பாட்டிலிருந்து இலங்கைத் தீவைப் பாதுகாக்க பௌத்த மகா சங்கத்தினருக்கும் இலங்கைப் படை வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் இந்த அழைப்பை விடுத்துள்ளார். சீனாவிடம் இருந்து இலங்கையைப் பாதுகாப்பது தொடர்பாக பௌத்த மகாநாயக்கத் தேரர்கள் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதாகக் கூறிய அவர் இது தொடர்பாக பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களோடும் பேசவுள்ளதாகவும் கூறினார்.
 
திஸ்ஸமகாராம வாவி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த சீன பிரஜைகள் அணிந்திருந்தது இராணுவ சீருடை அல்ல என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறுகின்றார். இலங்கை மக்கள் பார்வையற்றவர்கள் என்று கருதியே கெகலிய ரம்புக்வெல இவ்வாறு கூறுகிறாரா என்று துஷார இந்துனில் கேள்வி எழுப்பினார்.

திஸ்ஸமகாராம வாவியில் இடம்பெறும் அபிவிருத்தி பணிகள் முற்றிலும் தொல்பொருளியல் கட்டளை சட்டத்திற்கு முரணானது. தொல்பொருள் முக்கியத்துவம் உள்ள இடங்களில் சீனர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது ஆபத்தானதென்றும் துஷார இந்துனில் கூறியுள்ளார்.

இதேவேளை, சீன இராணுவ உடை தொடர்பாகத் தெளிவுபடுத்த வேண்டுமென ஜே.வி.பி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லையென ஜே.வி.பி உறுப்பினர் ஹந்துன் நெத்தி தெரிவித்துள்ளார்.