றிஷாட் பதியுதீனின் கொழும்பு இல்லத்தில் பணியாற்றிய

தமிழ் சிறுமி உயிரிழந்த விவகாரம்- முப்பது அறிக்கை பதிவு

இலங்கைப் பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு- றிஷாட் பதியுதீனும் குற்றவாளியாகச் சேர்ப்பு
பதிப்பு: 2021 ஜூலை 26 23:41
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 26 23:59
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் கொழும்பு இல்லத்தில் பணியாற்றிய தமிழச் சிறுமி உயிரிழந்த சம்பம் தொடர்பாக இதுவரை முப்பது அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசாரணைகள் எந்தவொரு அரசியல் அழுத்தங்களுக்கும் இடம்கொடாது நேர்மையாக முன்னெடுக்கப்படுமெனவும் பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. விசாரணைகள் மூலம் மேலும் பல பாலிஸ்துஸ்பிரயோகங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளதாகவும் அது பற்றிய விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.
 
குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் நிறுத்தப்படுவார்கள் என்றும் அரசியல் செல்லாக்கைப் பிரயோகிக்க முடியாதெனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறுமி உயிரிழந்தமை குறித்த விசாரணையில் றிஷாட் பதியுதீனும் ச்ந்தேக நபராகச் சேர்க்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபர்கள் நாளை மறுதினம் புதன்கிழமை புதுக்கடை நீதவான் நீதிதன்றத்தில் முன்விலைப்படுத்தப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, றஷாட் பதியுதீனின் கொழும்பு இல்லத்துக்குக் கூடுதலான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வீட்டில் தற்போது எவரும் இல்லாத நிலையில் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டம் டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதான தமிழ் சிறுமி எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.