இலங்கைத் தீவில்

ஆட்சி மாற்றம் குறித்து சஜித் மைத்திரி உரையாடல்- புலனாய்வு அறிக்கை கோட்டாவிடம் கையளிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மறுப்பு
பதிப்பு: 2021 ஜூலை 28 20:54
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 28 21:18
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#parliament
#election
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் கொழும்பில் சந்தித்து ஆட்சி மாற்றம் தொடர்பாகப் பேசி வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சிறப்புப் புலானய்வுப் பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர். கோட்டாபய ராஜபக்விடம் புலனாய்வு அறிக்கையைக் கையளி;க்கப்பட்டுள்ளதாகவும் ஆனாலும் அது தொடர்பாக எந்தவொரு கருத்தையும் ஜனாதிபதி கோட்டாபய வெளியிடவில்லையெனவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. இலங்கை ஒற்றையாட்சி அரசில் யார் ஆட்சியாளர்கள் என்பதை இதுவரை காலமும் தீர்மானித்து வந்த இந்தியா மற்றும் அமெரி்க்கா போன்ற மேற்குலக நாடுகள், 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் தோல்வியின் பின்னர் ஒதுங்கிவிட்டன.
 
இந்தத் தோல்வி மன நிலையால், இலங்கைத் தீவில் இனிமேல் யார் ஆட்சி அமைத்தாலும் அவர்களுடன் பேரம் பேசித் தங்கள் புவிசார் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ நோக்கங்களை நிறைவேற்றுவது என்பதை மாத்திரமு நோக்கமாகக் கொண்டு இந்த நாடுகள் செயற்பட்டு வருகின்றன.

இவ்வாறானவொரு சூழலில் சஜித் பிரேமதாசாவும் மைத்திரிபால சிறிசேனவும் ஆட்சி மாற்றம் பற்றிப் பேசியதாக இலங்கைப் புலனாய்வுத்துறை அதுவும் கோட்டாபய ராஜபக்சவின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருக்கின்றது.

ஆனால் சஜித் பிரேமதாசவை மைத்திரிபால சிறிசேன சந்திக்க வேண்டிய அவசியம் இல்லையென கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

இந்தப் புலனாய்வு அறிக்கை பொய்யானதென்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவில் இருந்து அகற்றும் நோக்கில் போலியாகத் தயாரிக்கப்பட்டது என்றும் அவர் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதேவேளை, இது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன எதுவுமே கூறவில்லை. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பணிப்போர் இடம்பெறுவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் கடுமையாக முரண்படுவதாகவும் நாடாளுமன்றத்தில் 16 உறுப்பினர்களும் தனித்துச் செயற்படுவது தொடர்பாக கட்சியின் மூத்த உறுப்பினர்களோ மைத்திரிபால சிறிசேன உரையாடி வருவதாகவும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் பலமான கூட்டு எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்குவது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெறுவதாகக் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.