வடமாகாணம்

யாழ்ப்பாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசிகள் செலுத்தும் பணி ஆரம்பம்

மூன்று இலட்சத்தி 75 ஆயிரம் தடுப்பூசிகள் வட மாகாணத்திற்கு கிடைத்துள்ளதாகக் கூறுகிறார் பணிப்பாளர் கேதிஸ்வரன்
பதிப்பு: 2021 ஜூலை 29 20:59
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 31 14:19
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்கையின் தமிழர் தாயகப்பகுதியான வட மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று 29ஆம் திகதி வியாழன் தொடக்கம் முதன் முறையாக 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்- 19 தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். கேதிஸ்வரன் தெரிவித்தார். சீனாவில் இருந்து பல இலட்சம் சினோஃபார்ம் தடுப்பூசிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விமானம் மூலம் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டது. குறித்த தடுப்பூசிகளில் சுமார் மூன்று லட்சத்தி 75 ஆயிரம் தடுப்பூசிகள் வட மாகாணத்திற்கு கிடைக்கப் பெற்றது.
 
இவ்விதம் வடக்கிற்கு கிடைக்கப்பெற்ற தடுப்பூசிகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு இரண்டு லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர். கேதிஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் தமிழர் தாயகப்பகுதியான வட மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று 29ஆம் திகதி வியாழன் தொடக்கம் முதன் முறையாக 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்- 19 தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். கேதிஸ்வரன் தெரிவித்தார்.

சீனாவில் இருந்து பல லட்சம் சினோஃபார்ம் தடுப்பூசிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விமானம் மூலம் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டது. குறித்த தடுப்பூசிகளில் சுமார் 3 லட்சத்தி 75 ஆயிரம் தடுப்பூசிகள் வட மாகாணத்திற்கு கிடைக்கப் பெற்றது. இவ்விதம் வடக்கிற்கு கிடைக்கப்பெற்ற தடுப்பூசிகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு இரண்டு லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதிஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட மேற்படி இரண்டு லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் யாழில் உள்ள 11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் வதியும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வியாழன் தொடக்கம் வழங்கப்படுவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

அத்துடன் யாழ் மாவட்டத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டுள்ள யாழ் பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் வட மாகாணம் மற்றும் ஏனைய மாகாணங்களில் பணியாற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் குறித்த சினோஃபார்ம் தடுப்பூசிகள் வியாழக்கிழமை செலுத்தப்பட்டதாகவும் மாகாண பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் யாழ் மாவட்டத்தில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்குப் அவர்கள் வதியும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள குறிப்பிட்ட நிலையங்களில் வைத்து அவர்களுக்கான சினோஃபார்ம் கொவிட் தடுப்பூசிகளை விரைவில் பிரத்தியேகமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை வட மாகாணத்திற்கு கிடைக்கப்பெற்ற சினோஃபார்ம் தடுப்பூசித் தொகுதிகளில் வவுனியா மாவட்டத்திற்கு 75 ஆயிரம் தடுப்பூசிகளும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தலா 50 ஆயிரம் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்படி மூன்று மாவட்டங்களிலும் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் அம்மாவட்டங்களைச் சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் குறித்த தடுப்பூசிகளைச் செலுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதிஸ்வரன் தெரிவித்தார்.