றிஷாட் பதியுதீனின் கொழும்பு இல்லத்தில் பணியாற்றியபோது எரிந்து

உயிரிழந்த சிறுமியின் உடலை அடக்கம் செய்த மயானத்தில் இருந்து எடுத்து மீண்டும் மருத்துவப் பரிசோதனை

பணியாற்றிய மேலும் பத்துப் பெண்களிடம் வாக்குமூலம் பெறப்படும் என்கிறார் அஜித் ரோகண
பதிப்பு: 2021 ஜூலை 29 21:43
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 31 14:19
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்னை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் கொழும்பில் உள்ள வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் நாளை மறுதினம் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்டு மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்யப்படவுள்ளதாக டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக தெரிவித்தார். சிறுமியின் உடல் நுவரேலியா மாவட்டம் டயகம தோட்டத்தின் மூன்றாம் பகுதியில் உள்ள பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
சிறுமியின் மரணம் தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால் கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் சிறுமியின் சடலத்தை அடக்கம் செய்யப்பட்ட மயானத்தில் இருந்து மீண்டும் எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டது.

இதனால், சிறுமி அடக்கம் செய்யப்பட்டுள்ள டயகம பொது மயானத்திற்குக் கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து டயகமவுக்குச் சென்ற சிறப்புப் பொலிஸ் குழு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அத்துடன் உடனடியாக மருத்துவப் பிரிசோதனை செய்வதற்காக சிறப்பு மருத்துவர் குழு ஒன்றும் டயகமவுக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதேவேளை, றிஷாட் பதியுதீனின் கொழும்பு இல்லத்தில் ஏற்கனவே பணியாற்றிய பத்துப் பெண்களில் ஐந்துபேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் ஏனைய பெண்களிடமும் வாக்குமூலம் பெறப்படுமெனவும் இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண கொழும்பில் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.