தீயில் எரிந்து உயிரிழந்த

சிறுமியின் சடலம் நீதிபதி, சட்ட மருத்துவர்கள் முன்னிலையில் மயானத்தில் இருந்து எடுக்கப்பட்டது

மருத்துவப் பிரிசோதனைக்காகப் பேராதனை போதனா வைத்தியசாலையில் கையளிப்பு
பதிப்பு: 2021 ஜூலை 30 21:27
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 31 12:48
main photo main photo main photo main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனின் கொழும்பு இல்லத்தில் சிறுவர் உரிமை சட்டத்தை மீறி தொழிலுக்கு அமர்த்தப்பட்ட நுவரெலியா டயகம மேற்கு தோட்டத்தை்ச் சேர்ந்த 16 வயது சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்ட மயானத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டுள்ளது. சென்ற மூன்றாம் திகதி தீக்காயங்களுக்கு உள்ளாகி, கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்ற 15 ஆம் திகதி சிறுமி உயிரிழந்தார். இந்த நிலையில் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற உத்தரவில் சிறுமியின் சடலம் டயமக மயானத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது. பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான நிலையில் சிறுமி உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில் ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.
 
ஆனாலும் எரியுண்ட நிலையில் சிறுமி உயிரிழந்தமை தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால், மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்வதற்காகவே நீதிமன்ற உத்தரவில் சடலம் அடக்கம் செய்யப்பட்ட மயானத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

இச்சிறுமியின் இறப்புக்குப் பின் அவரது உடல் கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பிரேதப் பெட்டி முற்றாக மூடப்பட்ட நிலையில் சிறுமியின் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பாகப் பெற்றோர் சிறுவர் உரிமை பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மனித உரிமை அமைப்புகளிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதற்கமைய கொழும்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் மற்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சிறுமியின் சடலத்தை இரண்டாவது முறையாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென கோரியிருந்தனர். இதனால் சடலத்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மயானத்தில் இருந்து எடுக்கப்பட்ட சடலம் பொலிஸ் பாதுகாப்புடன் கண்டி பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. நுவரெலியா மாவட்ட நீதிபதி, சட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் பொலிஸார் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.