மன்னார் போர்க்கால மனிதப் புதைகுழியில்

தாயுடன் இணைந்த நிலையில் குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு- அகழ்வுப் பணியாளர்கள் கூறுகின்றனர்

சர்வதேச விசாரனை அவசியம்- காணாமல் ஆக்கப்பட்டவர்களிள் உறவினர்கள்
பதிப்பு: 2018 ஜூலை 30 15:25
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 30 16:22
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடமாகாணத்தின் மன்னார் நகர நுழைவாசலில் உள்ள இலங்கை அரசாங்கத்தின் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் உள்ள போர்க்கால மனிதப் புதைகுழியில் இருந்து தாய் மற்றும் குழந்தையின் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. முதிர்ந்த ஒருவரின் எலும்புக் கூட்டுடன் ஒட்டியிருந்த களிமணல்களை அகற்றியபோது குழந்தைப் பிள்ளையின் சிறிய எலும்புக்கூடு ஒன்றும் இணைந்து காணப்பட்டது. இதனால் தாயும் குழந்தையும் அருகருகே புதைக்கப்பட்டிருக்கலாம் என அகழ்வுப் பணியில் ஈடுபடும் நிபுணர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை 43 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இன்று வரை சுமார் 60 மனித எலும்புக்கூடுகள் மற்றும் பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுடன் மீட்கப்படும் மனித எலும்புக் கூடுகள் பொதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மீட்கப்பட்ட தாய் மற்றும் குழந்தையுடைய எலும்புக்கூடுகள் தொடர்பாக தற்போதைக்கு எதுவும் கூற முடியாதென அகழ்வுப் பணியில் ஈடுபடும் களனி பல்கலைக்கழக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, இந்த மனிதப் புதைகுழி போர்க்காலத்திற்குரியது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.

இதுவரை மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக் கூடுகள், மனித எச்சங்களை மேலதிக ஆய்வுக்காக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மனித எலும்புகள் ஆய்வு செய்யும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அகழ்வுப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் கூறியிருந்தனர்.

மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் எலும்புக் கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் இலங்கை நீதியமைச்சிடமும் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனினும், இலங்கை நீதியமைச்சு அனுமதி வழங்கக்கூடிய சாத்தியங்கள் இல்லை என்றும் இந்த மனித எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரனை நேர்மையான முறையில் இடம்பெறுவதற்கு, சர்வதேச நாடுகள் ஒத்தழைக்க வேண்டும் என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியு்ள்ளனர்.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு- நாயன்மார்க் கட்டு செம்மணி பிரதேசத்திற்கு அருகில், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் போர்க்காலத்துக்குரிய மனிதப் புதைகுழி ஒன்று கண்டபிடிக்கப்பட்டிருந்தது.

ஆனால், யாழ் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக, மண் பாிசோசனை கூடச் செய்யப்படாமல் கல்வியங்காடு- நாயன்மார்க்கட்டு செம்மணி பிரதேச மனிதப் புதைகுழி தொடர்பான விசாரனைகள் கைவிடப்பட்டுள்ளன.

2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி மன்னார்- மாந்தை திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு சமீபமாக நீர் குழாய் திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் போர்க்காலத்திற்குரிய மனிதப் புதைகுழி ஒன்றைக் கண்டிருந்தனர்.

உடனடியாக நீர் குழாய் திருத்தப் பணிகள் நிறுத்தப்பட்டு, அந்த மனிதப் புதைகுழியில் இருந்து சுமார் 51 மனித எலும்புக் கூடுகள், மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.

அவ்வாறு மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் பொதி செய்யப்பட்டு மேலதிக ஆய்வுக்காக கொழும்புக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.

ஆனால், அந்த விசாரனைகளும் பின்னர் அப்படியே கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.