மன்னார் மாந்தையில்

கள்ளு உட்பட போதைப்பொருள் விற்பனைக்கு மக்கள் எதிர்ப்பு- சமூகத்தை திட்டமிட்டு சீரழிப்பதாகவும் குற்றச்சாட்டு

பேரணியாகச் சென்ற மக்கள் மகஜர் கையளித்தனர்
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 01 16:12
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 01 16:47
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகமான மன்னார் மாந்தை மேற்குப் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாப்பாமோட்டை, ஆக்காட்டிவெளி ஆகிய இரு கிராமங்களில் உள்ள கள்ளு விற்பனை நிலையங்களை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் பிரதேசத்தில் போத்தல் கள்ளு விற்பனையை முற்றாகத் தடை செய்யுமாறு வலியுறுத்தியும் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்ட மக்கள் கோஷம் எழுப்பினர். கிராமங்களில வாழும் இளைஞர்கள் பாடசாலை மாணவர்கள் மத்தியில் குடிப்பழக்கம் உருவாக்கி வருவதாகவும் பாரம்பரிய பண்பாடுகளை சிதைக்கும் நோக்கில், அனுமதியற்ற கள்ளு விற்பனை நிலையங்கள் அமைக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு நெடுங்கண்டல் பிரதான வீதியில் பேரணி ஆரம்பமானது.
 
இந்தப் பேரணியில் கலந்துகொண்ட அனைத்துக் கிராம மக்களும் பாப்பாமோட்டை, ஆக்காட்டிவெளி ஆகிய இரு கிராமங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கள்ளு விற்பனை நிலையங்களை மூடுமாறு உரக்கக் கோஷம் எழுப்பினர்.

போத்தல்களில் விற்பனை செய்யப்படும் கள்ளுகளில் போதைப் பொருட்கள் கலக்கப்படுவதாகவும் அந்த வியாபாரம் நிறுத்தப்பட வேண்டும் என்பதையே கிராம மக்கள் வற்புறுத்தி வருவதாகவும் பேரணியில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் இலங்கைப் பொலிஸார் தமது முறைப்பாடுகளை பதிவு செய்ய மறுப்பதாகவும் பேரணியில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சுமார் இரண்டு மணிநேரமாக இடம்பெற்ற இந்தப் பேரணியில் நூற்றுக்கனக்காக மக்கள், கலந்துகொண்டு எதிர்ப்பை வெளியிட்டனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், தமிழர் தாயகப் பிரதேசங்களில் போதைப் பொருள் பாவனை மற்றும் பண்பாடுகளை சீரழிக்கும் செய்பாடுகளை சில சக்திகள் உருவாக்கி வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

கள்ளு விற்பனை நிலையங்களை மூடுமாறு கிராம மக்கள் பலதடவை இலங்கைப் பொலிஸாருக்கு முறையிட்டபோதும், பொலிஸார் கவனம் எடுப்பதில்லை. பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்கப்படுவதாக பேரணியில் ஈடுபட்டவர்கள் முறையிட்டுள்ளனர்.

கொழும்பு அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய அரசியல் பிரதிநிதிகள் சிலரும் இதற்கு உட்ந்தையாக இருப்பதாகவும் பேரணியில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தினர்.

பேரணியின் முடிவில் மாந்தை மேற்கு பிரதேச செயலக அதிகாரிகளிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.