வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில்

முழுநேர தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்

அரசாங்கம் அறிவிப்பு- தியாகங்களைச் செய்வதற்கு மக்கள் தயாராக வேண்டும் என்கிறார் கோட்டா
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 20 21:29
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 22 00:13
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைத்தீவில் அதி தீவிரமாகப் பரவி வரும் கொவிட் -19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த இன்று 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணி தொடக்கம் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. கன்டி மகாநாயக்கத் தேரர்கள், அரசாங்கத் தரப்புக் கட்சிகள், எதிர்க்கட்சிகள். இலங்கை மருத்துவர் சங்கம் உள்ளிட்ட சுகாதார சேவைச் சங்கங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கையை அடுத்து ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு முன்னதாக இன்று பகல் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
 
அதேவேளை, ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும், மருந்து விற்பனை நிலையங்கள் இயங்குமெனவும், அத்தியாவசிய உணவு விநியோகம், விவசாயம், ஆடைக் கைத்தொழில் போன்ற நடவடிக்கைகளை எவ்வித தடையுமின்றி முன்னெடுக்க முடியுமென்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கான வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

இதேவேளை, கொவிட் தொற்று நீடித்தால் எதிர்காலத்தில் இலங்கைத்தீவு முழுவதையும் முடக்க நேரிடுமெனவும், ஆனால் மக்கள் சில தியாகங்களைச் செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

இன்றிரவு இலத்திரனியல் ஊடகங்கள் மூலமாக இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றினார். இதன்போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ள ஜனாதிபதி, சாதாரண தொழிலாளர்களும் பொது மக்களும் பாதிக்கப்படாமல் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை அறிமுகப்படுத்தியிருந்ததாகவும் கூறினார்.

ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை முன்னெடுக்க இது உரிய நேரம் அல்ல எனவும் பொறுமையோடு செயற்படுமாறும் கோரிக்கை விடுத்த ஜனாதிபதி கோட்டாபய, நோய்த் தொற்றுக்கு மத்தியில் போராட்டங்களை நடத்தி இலங்கையைச் சிக்கலுக்குள் தள்ள வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டார்.