இலங்கைத்தீவில்

கொவிட் நோய்ப்பரவல் அதிகரிப்பு- மூன்று வாரங்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நீடிக்குமாறு கோரிக்கை

இதுவரை ஏழாயிரத்து 560 பேர் உயிரிழப்பு
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 24 10:29
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 24 20:47
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைத்தீவில் கொவிட் நோய்த்தாக்கம் மேலும் திரிபடைந்து செல்வதால் தினமும் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்குமெனவும் ஒரு மாதகாலம் வரை மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டுமெனவும் இலங்கை மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரையான 24 மணிநேரத்தில் 194 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கைச் சுகாதாரத் திணைக்களம் நேற்றுத் திங்கட்கிழமை இரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
இதுவரை ஏழாயிரத்து 560 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளபோதும் அத்தியாவசியத் தேவைகளுக்காக கொழும்பு நகருக்குள் வந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்குமாறும் சோதனையிடப்பட்ட பின்னர் அந்த வாகனங்களை நகருக்குள் அனுமதிக்குமாறும் கொழும்பு மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை மேலும் மூன்று வாரங்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.