இலங்கைத்தீவில்

அவசரகாலச் சட்டம்- பாராளுமன்றத்தில் விவாதம்

ஜனாதிபதியின் அதிகாரம் மேலோங்குமென ஜே.வி.பி எச்சரிக்கை
பதிப்பு: 2021 செப். 02 22:44
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 04 12:45
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
அவசரகாலச் சட்டம் தொடர்பாக விவாதிப்பதற்கு இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றம் எதிர்வரும் 6 ஆம் 7 ஆம் திகதிகளில் கூடவுள்ளது. நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பாக இன்று வியாழக்கிழமை சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதன்போது அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி அமுல்படுத்தியமை தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரியிருந்தன. இதனை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் விவாதத்திற்குச் சம்மதம் தெரிவித்தார்.
 
அவரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. கொவிட் நோய்த் தொற்றைத் தேசிய பேரிடர் என்று பிரகடனப்படுத்த வேண்டுமெனவும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியிருக்க வேண்டிய அவசியம் இல்லையெனவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்சா டி சில்வா கூறியுள்ளார்.

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியமை தொடர்பாக அரசாங்கத் தரப்பு அங்கத்துவக் கட்சி உறுப்பினர்கள் சிலரும் விசனம் வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதா இல்லையா என்பதை நாடாளுமன்ற விவாதத்தில் ஆராயவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெகலிய ரம்புக்வெல இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அவசரகாலச் சட்டம் அமுலில் இருப்பதால். ஜனாதிபதியின் அதிகாரம் மேலோங்குமென ஜே.வி.பி எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.