இலங்கை ஒற்றையாட்சி அரசின்

மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால்

எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
பதிப்பு: 2021 செப். 12 11:04
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 12 13:17
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கை ஒற்றையாட்சி அரசின் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து வீ.டி.லக்ஸ்மன் விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்த அஜித் நிவாட் கப்ரால், தற்போதும் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பராகவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும் இவர் பதவி வகிக்கின்றார். ஆளுநர் பதவியை ஏற்பதற்காக இவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.
 
இந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிதித் திருத்தச் சட்டத்தின் மூலம் கறுப்புப் பணத்தை வைத்திருப்போர் அதனை வங்கியில் செலுத்தி வட்டிவீதங்களைப் பெறக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிதித் திருத்தச் சட்டத்தை தமக்கு ஏற்றவாறு நடைமுறைப்படுத்தும் நோக்கிலேயே அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் கர்சன ராஜகருணா குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், மத்திய வங்கி ஆளுநரின் பதவி விலகல் அறிவிப்புக்குப் பின்னால் அழுத்தங்கள் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஜே.வி.பியும் சந்தேகம் வெளியிட்டுள்ளது.