இலங்கைத்தீவில் உள்ள

நீதி நிறுவனங்களின் பணிகளை வெளியகப் பொறிமுறையால் மாற்றவோ கையகப்படுத்தவோ இடமளிக்க முடியாது- பீரிஸ்

இணையவழி உரையாடலில் தெரிவிப்பு
பதிப்பு: 2021 செப். 20 22:55
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 21 02:21
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைத்தீவில் இருக்கின்ற உள்ளூர் நீதி நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளை மேலும் உரிய முறையில் செயற்படுத்தப் போதிய நடைமுறைகள் இல்லை. ஆனால் அதற்காக இந்த நிறுவனங்கள், அமைப்புகளின் பணிகளை வெளியகப் பொறிமுறைகளினால் மாற்றவோ அல்லது கையகப்படுத்தவோ இடமளிக்க முடியாதென வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜெனீவா மனித உரிமைச் சபை பரிந்துரைத்துள்ள வெளியகப் பொறிமுறையை ஏற்க முடியாதென அமைச்சர் அடித்துக் கூறியுள்ளார்.
 
பொதுநலவாய பொதுச் செயலாளர் பட்ரிசியா ஸ்கொட்லேன்ட்டுடன் இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடலில் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜெனீவா மனித உரிமைச் சபை மற்றும் பொதுநலவாய நாடுகளுடன் இணைந்து செயற்படும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்திய அமைச்சர் பீரிஸ், பொதுநலவாய நாடுகளின் குறிக்கோள்களுக்கு ஏற்ப அர்பணிப்போடு இலங்கை செயற்படுவதாகவும் கூறினார்.

இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாகவும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் நீண்ட விளக்கமளித்துள்ளார். இந்த இணைய வழி உரையாடல் தொடர்பாக வெளியுறவு அமைச்சு இன்று திங்கட்கிழமை கொழும்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.