இலங்கைத்தீவின் சிங்கள மாவட்டமான

கம்பகா மின்நிலையத்தின் 40 சதவீதத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் இணக்கம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியூயோர்க் சென்றுள்ளவேளை பங்காளிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு
பதிப்பு: 2021 செப். 21 23:07
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 22 02:12
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கொழும்பின் எல்லை மாவட்டமான கம்பகா மாவட்டத்தில் உள்ள கெரவலப்பிட்டிய பிரதேசத்தின் ஒரு பகுதியை எரிபொருள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்படுவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளமைக்குக் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவுக்குச் சென்றுள்ளவேளையில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் இதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
 
அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர், தலைமையிலான பங்காளிகளே, எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று செவ்வாய்க்கிழமை இரவு கூடி ஆராய்ந்துள்ளது. அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்வதற்காக இணக்கம் தெரிவித்தமை தொடர்பாக அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமென மைத்திரிபால சிறிசேன கூட்டத்தில் கூறியதாகக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கெரவலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள மின்நிலையத்தின் 40 சதவீதத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு கைமாற்றுவதற்கான ஆரம்ப உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திட்டிருப்பதாகப் பங்காளிக் கட்சிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

தமிழ்பேசும் மக்களின் தாயகமான திருகோணமலைத் துறைமுகத்தை அண்டிய முப்பத்து மூன்று ஏக்கர் காணியை அமெரிக்காவுக்குக் குத்தகைக்குக் கொடுத்துள்ளதாக தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் சமீபத்தில் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.