இலங்கைத்தீவில்

கொவிட் நோய்த் தாக்கம் குறைவடைவதாக சுகாதார அமைச்சு கூறுகிறது

24 மணி நேரத்தில் 72 பேர் உயிரிழப்பு
பதிப்பு: 2021 செப். 23 23:32
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 25 08:15
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைத் தீவில் கொவிட் நோய்த் தாக்கம் குறைவடைந்து வருவதாக இலங்கைச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையினால் நோய்ப் பரவல் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது என்றும் ஆனாலும் மக்கள் தொடர்ச்சியாகச் சுகாதார நடைமுறைகளைப் பேண வேண்டுமெனவும் சுகாதார அமைச்சர் கெகலிய ரம்புக்வெல கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.
 
பிசிஆர்பரிசோதனைகள் குறைக்கப்பட்டதால் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவடைந்ததாகவும் பரிசோதனைகள் மேலும் அதிகரிக்கப்பட்டால் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமெனவும் இலங்கை மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆனாலும் நோய்த் தொற்றின் தாக்கம் சற்றுக் குறைவடைந்துள்ளதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைவடைய ஆரம்பித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரட்ன தெரிவித்துள்ளார்.

நேற்றுப் புதன்கிழமை நள்ளிரவு வரையான 24 மணிநேரத்தில் 72 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத் திணைக்களம் இன்று வியாழக்கிழமை இரவு அறிவித்துள்ளது.