இலங்கை ஒற்றையாட்சி அரசின் மூத்த நிர்வாக சேவை அதிகாரியான

ஜயசுந்தர செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்

ஆனாலும் அரசாங்கம் மறுப்பு- உள்ளக முரண்பாடுகள் காரணமெனவும் தெரிவிப்பு
பதிப்பு: 2021 ஒக். 02 09:34
புதுப்பிப்பு: ஒக். 03 09:47
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயலாளாராகவும் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பராகவும் விளங்கிய பி.பி ஜயசுந்தர அந்தப் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளார். ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றச் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்புக்குத் திரும்பியதும் ஜயசுந்தர பதவி நீக்கப்படுவாரென ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன.
 
இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான ஜயசுந்தர மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது முக்கியமான உயர் பதவிகளை வகித்திருந்தார். சமீபத்தில் எழுந்த முரண்பாட்டினால் ஜனாதிபதியின் செயலாளர் பதவி இருந்து அவர் நீக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஆனால் அவர் தொடர்ந்தும் செயலாளராகப் பதவி வகிப்பாரென அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. ஜயசுந்திர பதவி நீக்கப்பட்டால், அவருடைய இடத்திற்குப் புதிய செயலாளராக மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பரான லலித் வீரதுங்க நியமிக்கப்படலாமெனவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

பிரதமர் மகிந்த ராஜபக்சவை மையமாகக் கொண்ட ஸ்ரீலங்க பொதுஜனப் பெரமுனக் கட்சியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கிடையே எழுந்த முரண்பாட்டையடுத்து ராஜபக்ச அரசாங்கத்துக்குள் மேலும் மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.

பி.பி.ஜயசுந்தர ராஜபக்ச குடும்பத்துக்கு நெருக்கமானவராக இருந்தாலும் அமைச்சர் விமல் வீரவன் உள்ளிட்ட சிறிய பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நெருக்கமானவர் எனவும் அவர்கள் சார்பான சில பரிந்துரைகளை ஜயசுந்தர வழங்கியதாலேயே அவர் மீது ஜனாதிபதி அதிருப்தியடைந்தாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனாலும் ஜயசுந்தரவின் சேவை போதுமானதெனவும் அவருக்கு ஓய்வு வழங்க வேண்டுதென்பதாலேயே புதிய செயலாளரை நியமிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதிக்கு நெருக்கமான சிலர் கூறுகின்றனர்.