கிழக்கு மாகாணம்

திருகோணமலையில் புதிய எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்க முடியாதென்கிறார் அமைச்சர் கம்மன்பில

இந்திய வெளியுறவு அமைச்சர் கொழும்பில் நிற்கும்போதே எச்சரிக்கை
பதிப்பு: 2021 ஒக். 05 10:44
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 06 10:53
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
திருகோணமலை எண்ணெய் வளாகத்தில் புதிய எண்ணெய் தாங்ககளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக இந்திய இலங்கையுடன் பேசி இணக்கம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியின் அமைச்சரான உதயகம்பன்பில அதற்கு எதிர்ப்புத் வெளியிட்டுள்ளார். இந்தியாவிடம் ஒப்படைக்கப்போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
 
1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரமும் எண்ணெய்க்குதங்களை இந்தியாவுக்கு வழங்குவது குறித்து 2003 ஆம் ஆண்டு செய்யப்பட்ட உடப்டிக்கையின் பிரகாரமும் இந்தியாவுக்கு உரியதாக்கப்பட்ட இந்த எண்ணெய்குதங்களை மீளப் பெற்று அதனை இலங்கை அரசாங ;கம் கையாள வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்புக்கு வருகை தந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் திகோணமலக்குச் சென்று எண்ணெய்க்குதங்;களைப் பார்வையிட்டார். பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் நடந்திய சந்தி சந்திப்பிலும் அந்த எண்ணைக்குதங்களைப் பாரமரிப்பது மேலும் புதிய எண்ணைக்குங்களை இந்தியாவுக்கு வழங்குவது உள்ளிட்ட உரையாடல்களை நடத்திய நிலையில், அமைச்சர் உதய கம்பன்வல இவ்வாறு கூறியுள்ளார்.