பண்டோரா பேப்பர்ஸ் ஆவணம் வெளியிட்ட தகவலின் படி-

ராஜபக்ச குடும்பத்தின் சொத்து என்கிறது எதிர்க்கட்சி

மேலும் 65 பேரின் பெயர்கள் வெளியிடப்படவுள்ளதாக அறிகின்றோம் என்கிறர் ராஜித
பதிப்பு: 2021 ஒக். 07 20:38
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 08 20:47
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
மூலம் வெளிப்படுத்தப்படட நிருபமா ராஜபக்ச அவருடைய கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் சொத்துக்கள் அனைத்தும் ராஜபக்ச குடும்பத்துக்குச் சொந்தமானவையென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பணத்தை மறைத்து வைத்துள்ள மேலும் பலருடைய பெயர்கள் வெளிவரலமெனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளர்.
 
இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபயசிங்கவும் ராஜபக்ச குடும்பத்தின் மீது குற்றம் சுமத்தியுதுடன் நிருபமா ராஜபக்ச வைப்பிலிட்டுள்ள பணத்தின் விபரங்கள் அனைத்தும் வெளிப்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய பிரதமர் மகிந்த ஆகியோருக்குத் தெரியாமல் நிருபமா ராஜபக்சவினால் இவ்வளவு பணத்தையும் இலங்கைக்கு வெளியே கொண்டு சென்றிருக்க முடியாதெக ராஜித சேனாரட்ன கூறினார்.

ராஜபக்ச குடும்பத்துக்கு ஆதரவான மேலும் 65 பேருடைய சொத்துக்கள் பற்றிய விபரங்களும் விரைவில் வெளிவருமெனவும் ராஜித சேனாரட்ன கூறினார். விசாரணை செய்வதற்காக கோட்டாபய ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவில் நம்பிக்கை இல்லையென அசோக அபயசிங்க தெரிவித்தார்.