இலங்கைத்தீவில்

இனவாதத்தை அரசாங்கம் தூண்டுவதாகக் குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ராஜபக்ச ஆட்சி மீது கடும் குற்றச்சாட்டு
பதிப்பு: 2021 ஒக். 08 21:39
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 08 21:47
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
ராஜபக்ச அரசாங்கம் மற்றுமொரு இனவாத மோதலுக்குத் துண்டுவதாக இன்று வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அமைச்சர்கள் சிலரும் மற்றும் பொதுபல சேனவின் பொதுச் செயலாளர் அத்தே ஞானசார தேரர் ஆகியோரின் பேச்சுகள். செயற்பாடுகள் அச்சத்தை உருவாக்கி வருவதாகவும் கூட்டிக்காட்டியுள்ளனர். சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் இம்ரான் மகுறூப். ஞானசார தேரரின் செயற்பாடுகளினால் முஸ்லிம் இளைஞர்கள் ஆத்திரமடைந்துள்ளதாகக் கூறினார்.
 
முஸ்லிம் மக்களின் பிரதேசங்களுக்குச் சென்று ஞானசார தேரர் இனவாதமாகப் பேசுவதாகவும் இது பௌத்த நாடெனவும் கூறி வருவதாக இம்ரான் மகுறூப் கூறினார்.

இந்த விவாதத்தில் உரையாற்றிய சரத் பொன்சேகா. மற்றுமொரு இனக்கலவரத்துக்கு அரசாங்கம் தூபமிடுவதாகக் குற்றம் சுமத்தினார். அமைச்சர்கள் சிலரும் பெறுப்பற்ற முறையில் பேசி தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்குவதாகவும் முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா கூறினார்.

ஜே.வி.பி உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்காவும் அரசாங்கத்தின் இனவாதச் செயற்பாடுகளைக் கண்டித்தார்;. ஞானசார தேரர் பொலிஸாரின் பாதுகாப்புடன் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரதேசங்களுக்குச் சென்று வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.