வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு இந்திய வெளியுறவுச் செயலாளர் வலியுறுத்தவில்லை- அமைச்சர் பீரிஸ்

அப்படிக் கேட்பதற்கு எவருக்குமே உரிமையில்லை என்றும் கூறுகிறார்
பதிப்பு: 2021 ஒக். 11 22:44
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 15 14:28
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டுமென இந்திய வெளியுறவுச் செயலாளர் கஸ்வர்த்தன ஸ்ரிங்கா இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவில்லையென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருகின்ற அதிகாரம் இந்தியாவுக்குக் கிடையாதெனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
 
காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த வாதப்பிரதி வாதங்களை ஆரம்பித்து அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மாகாண சபை தேர்தலை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் நடத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. அதற்குரியவாறு நாடாளுமன்றத்தில் சிறப்புப் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் கூறினார்.

எந்தவொரு தேர்தலை நடத்துவதாக இருந்தாலும் அரசாங்கமே தீர்மானம் எடுக்க வேண்டும். இந்தியா அல்ல என்று அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் கூறினார்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் கொழும்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைச் சந்தித்திருந்தபோது, 13 ஆவது திருத்தச் சட்டமே அரசியல் தீர்வு எனக்கூறியிருந்தார். யாழ்ப்பாணத்திலும் தமிழ்த்தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்திருந்தபோது அவ்வாறு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.