இலங்கைத்தீவின் தலைநகர்

கொழும்பு ரஜமாக விவகாரையில் கைக்குண்டு மீட்பு

பொலிஸார் விசாரணை
பதிப்பு: 2021 ஒக். 13 08:39
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 15 14:06
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கொழும்பு பொரலெஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள பெல்லன்வில ரஜமகா விகாரையில் கைக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று புதன்கிழமை பிற்பகல் இந்தக் கைக்குண்டு கைப்பற்றப்பட்டதாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது. விகாரையில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் கைக்குண்டு விகாரையில் உட்புறமாகவுள்ள சிவருக்கு அடியில் வைக்கப்பட்டிருந்தததைக் கண்டு விகாராதிபதிக்கு அறிவித்துள்ளார்.
 
அதனையடுத்துப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. விகாரைக்குச் சென்ற குண்டு செயலிழப்பு பிரிவின் உதவியுடன் பொலிஸார் கைக்குண்டை மீட்டனர். புன்னர் விகாரை வளாகத்தில் வைத்து குண்டைச் செயலிழக்கச் செய்தனர்.

கைகக்குண்டை விகாரைக்குள் கொண்டு வந்தது யார் எனவும் எப்படிக் கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பாகவும் பொலிஸார் விகாரையில் உள்ள பலரிடமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை குறித்த விகாரையில் சிறப்பு வழிபாடு ஒன்று இடம்பெறவிருந்த நிலையிலேயே கைக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது.