கம்பகா மாவட்ட கெரவலப்பிட்டிய

மின் நிலையம் அமெரிக்காவிடம்- உயர் நீதிமன்றத்தில் மனு

பேராயர் மல்கம் ரஞ்சித், எல்லே குணவன்ச தேரர் இணைந்து நடவடிக்கை
பதிப்பு: 2021 ஒக். 20 10:19
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 21 14:22
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கொழும்பின் அயல் மாவட்டமான கம்பகா மாவட்டத்தில் உள்ள கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்காவின் நிவ்போர்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்வதைத் தடுக்குமாறு கோரி கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் இணைந்து உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
 
சென்ற திங்கட்கிழமை தாக்கல் செய்த மனுவில் அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கவுள்ள இயற்கைத் திரவவாய்வு விநியோக ஒப்பந்தத்தைத் தடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவில் பிரதமர் மகிந்த ராஜபக்ச அமைச்சரவை மற்றும் அமைச்சரவையின் செயலாளர். நிதியமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் ஆகியோர் உட்பட 54 பேர் பொறுப்புக் கூறவேண்டுமெனவும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க நிவ்போர்ட் நிறுவனத்தின் பெயரும் மனுவில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கவுள்ளமை தொடர்பாக எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் இரகசியமாகச் செய்யப்பட்டுள்ளதாக ஜே.வி.பி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மேற்கொண்ட விசாரணைகளில் அதிருப்தியடைந்துள்ள பேராயர் மல்கம் ரஞ்சித், சர்வதேச சமூகத்திடம் நீதி கோரவுள்ளதாகச் சமீபத்தில் கூறியிருந்த நிலையில், கெரவலப்பிட்டிய மின் நிலைய விவகாரம் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.