இலங்கைத்தீவில் இடம்பேற்ற

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைகளில் சந்தேகம்- பகிரங்கமாகக் கூறுகிறார் பேராயர்

சர்வதேச நீதியைக் கோரவுள்ளதாகவும் தெரிவிப்பு
பதிப்பு: 2021 ஒக். 21 17:38
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 22 20:56
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைத்தீவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு அன்று தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால், பேராயர் மல்கம் ரஞ்சித் சந்தேகம் வெளியிட்டுள்ளார். விசாரணைகள் தொடர்பாகச் சந்தேகத்துக்குரிய கேள்விகளை பேராயர் எழுப்பினார். கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட ஆராதனையில் நிகழ்த்திய பிரசங்கத்தின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 30 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. ஆனால் இதுவரையும் குற்றவாளிகள் யார் என்று உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தத் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழவின் பரிந்துரைகள் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. அத்துடன் அந்தப் பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ள விடயங்களையும் அரசாங்கம் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் பேராயர் கூறினார்.

அரசாங்கத்தின் இச் செயற்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கூறிய பேராயர், சர்வதேச நீதியைக் கோருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசாங்க விசாரணைகளில் நம்பிக்கையிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.