இலங்கைத்தீவில்

கொவிட் முடக்கத்தின் பின்னர் ஆரம்பப் பிரிவுப் பாடசாலைகள் ஆரம்பம்

புதிய சுகாதார விதிகளும் அறிவிப்பு
பதிப்பு: 2021 ஒக். 25 21:43
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 29 20:18
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கொவிட் தொற்று நோய்த் தடுப்புக்கான முடக்கத்தின் பின்னர் இலங்கைத்தீவு முழுவதிலும் உள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகள் அனைத்தும் இன்று திங்கட்கிழமை முதல் இயங்க ஆரம்பித்துள்ளன. சுமார் ஆறு மாதங்களின் பின்னர் இன்று ஆரம்பப் பிரிவுப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏனைய பிரிவு வகுப்புகள் அனைத்தும் அடுத்த வாரம் முதல் செயற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துத் தடை எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவுடன் நீக்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
 
கொவிட் நோய்ப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக சுகாதார அமைச்சு இன்று இரவு வெளியிடப்பட்டுள்ள புதிய விதிமுறைகளிலேயே மாகாணப் போக்குவரத்துக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மேலும் சில தளர்வுகளை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

திருமண மண்டபத்தின் மூன்றில் ஒரு பங்கு கொள்ளளவில் 100 பேருக்கு மேற்படாமல் திருமண வைபவங்களில் கலந்து கொள்ளமுடியும். மேலும், திறந்த வெளி திருமண நிழ்வுகளில் 150 பேர் கலந்து கொள்ள முடியும் ஆனால் மதுபானங்களைப் பகிர அனுமதி இல்லை.

மாவட்டங்களில் இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.