இலங்கை ஒற்றையாட்சி அரசின்

ஒரே நாடு ஒரே சட்டம்- செயலணியின் தலைவராக ஞானசார தேரர் நியமனம்- நால்வர் முஸ்லீம்கள்

கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவில் அரச வர்த்தமானி இதழ் வெளியானது-
பதிப்பு: 2021 ஒக். 27 21:48
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 29 20:18
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரிமையின் பிரகாரம் ஜனாதிபதிக்குரிய அதிகாரத்தின் கீழ் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதைச் செயற்படுத்த 13 பேர் அடங்கிய ஜனாதிபதிச் செயலணி ஒன்றை கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார். தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி வரும் ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொதுபல சேன அமைப்பின் செயலாளராகப் பதவி வகித்துக் கொண்டு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான பல வன்முறைகளில் ஏற்கனவே ஈடுபட்டவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்தவொரு நிலையில் தேரர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தச் செயலணியில் நான்கு முஸ்லிம் பிரநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழர்கள் எவரும் இல்லை.
 
செயலணியின் செயலாளராக ஜனாதிபதியின் மூத்த உதவிச்செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

செயலணியின் உறுப்பினர்கள் மாதத்திற்கொரு ஒரு முறை கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான இறுதி அறிக்கை 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தச் செயலணி தொடர்பான அரச வர்த்தமானி இதழ் வெளியிடப்பட்டுள்ளது. இந்ச் செயலணியில் தமிழர்கள் எவருமே இல்லையென தமிழ்க் கட்சிகள் கண்டனங்களை வெளியிட்டபோதும் ஜே.வி.பி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவருமே இந்தச் செய்தி எழுதப்படும்வரை கண்டனம் வெளியிடவேயில்லை.

பேராசிரியர் தயானந்த பண்டார, பேராசிரியர் சாந்திநந்தன விஜயபண்டார, பேராசிரியர் சுமேத சிறிவர்தன, என்.ஜி.வ சுஜீவ பண்டிதரத்ன, மற்றும் சட்டத்தரணி இரேஷ் செனெவிரத்ன, சட்டத்தரணி சஞ்சய மாரம்பே, எரந்த நவரத்ன, பாணி வேவல, மௌலவி மொஹமட்(காலி உலமா சபை), விரிவுரையாளர் மொஹொமட் இந்திகாப், கலீல் ர{ஹமான், அஸீஸ் நிசார்தீன் ஆகியோர் செயலணியில் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

செயலணியின் செயற்பாடுகளுக்கு அனைத்து அரச உத்தியோகத்தர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பணிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து விடயங்களை விசாரிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும் இந்தச் செயலணிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தமானி இதழில் கூறப்பட்டுள்ளது.