ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் அதிகரிப்பு

மகிந்த முன்னிலையில் பங்காளிக் கட்சிகள் சந்திப்பு

நீண்ட நேரம் விவாதம் இடம்பெற்றது
பதிப்பு: 2021 ஒக். 29 19:05
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 29 20:12
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சிக்குள் முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்திப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை மாலை திடீரென அழைப்பு விடுத்துள்ளார். நேற்று மாலை 5 30க்குச் சந்திப்பு நடைபெறுமென அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அமைவாகச் சுமார் நான்கு மணி நேரத்துக்கும் அதிகமாகக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
 
ஏற்கனவே கோட்டாபய ராஜபக்ச சந்தித்தபோது விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார. பேராசிரியர் திஸ்ஸவிதார ஆகியோர் சமூகமளித்திருக்கவில்லை. இதனால் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அலரி மாளிகையில் மீண்டும் நேற்று சந்திப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மகிந்த ராஜபக்ச முன்னிலையில் சந்திப்பு நடைபெற்றது. கம்பாக கெரவலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள மின்சக்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதம் இடம்பெற்றதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

விமல் வீரவன்ச சந்திப்பில் கலந்துகொள்வதாகவும் உள்ளக முரண்பாடுகள் தொடர்பாக நீண்டநேரம் பேசினாரெனவும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது தொடர்பாக ஊடகங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

கட்சியின் மூத்த உறுப்பினர்கள், மூத்த அமைச்சர்கள் பலரின் கையடக்கத் தொலைபேசிகளும் ஊடகவியலாளர்கள் தொடர்பு கொள்ள முடியாதவாறு நேற்று முழுவதும் செயலிழந்து காணப்பட்டன.