இலங்கை அரசாங்கத்திற்குள்

முரண்படும் அமைச்சர்கள் வெளியேறலாம்- காமினி லொக்குகே

அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதாகவும் சொல்கிறார்
பதிப்பு: 2021 நவ. 01 21:34
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 02 21:01
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்து கொண்டு முரண்படுவோர் எந்த நேரத்திலும் வெளியேறிச் செல்லலாமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான மூத்த அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதயகம்பன்வில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் ஊடக மாநாடுகள் நடத்தி நாடகமாடிக் கொண்டிருப்பதாகவும் இவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறினாலும், மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை அரசாங்கம் பெற்றுக் கொள்ளுமெனவும் அமைச்சர் காமினி லொக்குகே கூறினார்.
 
கொழும்பில் இன்று இடம்பெற்ற மின்சார சபையின் 52 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் காமினி லொக்குகே இவ்வாறு தெரிவித்தார்.

களனிதிஸ்ஸ உப மின் நிலையத்தின் அனைத்துப் பங்குகளும் அமெரிக்க நிறுவனத்திடமே இருந்தது. அது தற்போதுதான் ஜப்பான் நிறுவனம் ஒன்றுக்குக் கைமாற்றப்பட்டுள்ளது. இது இந்த அமைச்சர்களுக்குத் தெரியுமா என்று காமகி லொக்குகே கேள்வி எழுப்பினார்.

கெரவலப்பிட்டிய மின் நிலையத்தை அபிவிருத்தி செய்ய அமெரிக்க நிறுவனத்திடம் கையளித்தமை குற்றமா எனவும் கேள்வி எழுப்பிய அமைச்சர் காமினி லொக்குகே, கெரவலப்பிட்டி மின் நிலையத்தில் இருந்து பத்து சதவீத மின்சாரம் மாத்திரமே பெறப்படுவதாகவும் அதனால் அதனை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும் கூறினார்.

முரண்படும் அமைச்சர்களுக்கு இவை காரணமல்ல எனவும் அவர்களுக்கு வேறு அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் காமனி லொக்குகே குறிப்பிட்டார்.