இலங்கைத்தீவில்

சிறுவர்களைத் தாக்கும் கொவிட் 19

இரண்டு நாட்களில் 16 குழந்தைகள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதி
பதிப்பு: 2021 நவ. 05 18:42
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 06 12:37
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைத்தீவில் கொவிட் 19 நோய்த் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். சுகாதார விதிமுறைகளை பொது மக்கள் உரிய முறையில் பின்பற்றத் தவறுவதும் இதற்கு ஒரு காரணம் என்றும் மருத்துவர் தீபால் பெரேரா கூறினார்.
 
கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், நேற்று நான்காம் திகதி கொழும்பில் பொரளையில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி ஏழு சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இன்றுவரை 16 சிறுவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தீபால் பெரேரா தெரிவித்தார். சிறுவர்கள் நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால், அதற்குரிய சிகிச்சை வசதிகள் போதியதாக இல்லை என்றும் கூறிய அவர் இது தொடர்பாக அரசாங்கத்துக்கு நேற்று வியாழக் கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.