உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்

அரசாங்கத்தைக் கண்டிக்கும் கருத்து- அருட்தந்தை சிறில் காமினியைக் கைது செய்ய ஏற்பாடு

எதிர்த்துக் கொழும்பில் ஆர்ப்பாட்டம்- சட்டமா அதிபர் திணைக்களம் விளக்கம்
பதிப்பு: 2021 நவ. 08 22:09
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 12 20:42
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக அரசாங்கத்தைக் கண்டிக்கும் கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில், கொழும்புப் பேராயர் இல்லத்தில் அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படவுள்ளதைக் கண்டித்துக் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை கொட்டும் மழையிலும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் அருட் தந்தையர்கள், பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
 
ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் நம்பிக்கை இல்லை. அந்த அறிக்கை முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. அரசாங்கம் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதால், அரசாங்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அருட்தந்தை சிறில் காமினி செய்தியாளர் மாநாடு ஒன்றில் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.

அதனால் அருட்தந்தையைக் கைது செய்ய வேண்டுமென அமைச்சர்கள் சிலரும் பௌத்த தேரர்கள் சிலரும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால் அருட்தந்தையைக் கைது செய்யும் நோக்கம் இல்லையெனவும் ஆனாலும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக தற்போதைய அரசாங்கத்துக்குத் தொடர்புள்ளது என்ற தொனியில் கருத்து வெளியிடப்பட்டதாலேயே குற்றப் புலனாய்வுப் பொலிஸார் விசாரணை நடத்தியதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே அருட் தந்தை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார். ஆனால் பொலிஸாரின் விசாரணை முடிவடையாமல் அருட்தந்தை சிறில் காமினியைக் கைது செய்யும் செய்யும் நோக்கம் இல்லையென சட்டமா அதிபர் திணைக்களம் கூறியுள்ளது.