விலையேற்றத்தின் பின்னர்

வெடித்துச் சிதறும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

இதுவரை 22 வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பதிப்பு: 2021 டிச. 01 20:29
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 02 00:14
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைத் தீவின் பல மாவட்டங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறுகின்றமை தொடர்பாக ஆராய நாடாளுமன்ற உப குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. விசாரணை நடத்தி உரிய விளக்கத்தைப் பெற வேண்டுமென கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அறிய முடிகின்றது. உப குழுவைக் கூட்டுமாறு சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன நேற்றுச் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். சிலிண்டர்கள் வெடித்துச் சிதறுகின்றமை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் அமைச்சர் லசந்த அழகிய வண்ணவிடம் கேள்வி எழுப்பினார்.
 
அதற்குப் பதில் அளித்த அவர் இது தொடர்பாக சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன உப குழு ஒன்றைக் கூட்டுவோமெனப் பரிந்துரைத்தார். இதனையடுத்து உப குழுக் கூட்டத்தை அவசரமாக கூட்டுமாறு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவிடம் சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்.

அம்பாந்தோட்டை, குருநாகல், காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறுகின்றன. இதுவரை ஒன்பது பேர் பலியானதுடன் பலர் எரிகாயங்களுக்கு உள்ளாகினர்.

இன்று புதன்கிழமையும் சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கொழும்புச் செய்திகள் கூறுகின்றன. இதுவரை இருபத்து இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.

சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரித்த பின்னரே இந்த நிலமை ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.