உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்

அரசாங்கத்தின் மீது பேராயர் பகிரங்கக் குற்றச்சாட்டு

மாற்று நடவடிக்கை குறித்த ஏற்பாட்டுக்கும் தயாரென்கிறார்
பதிப்பு: 2021 டிச. 13 22:53
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 14 23:31
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் எந்தவொரு முறையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் காரசாரமான தொனியில் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகளும் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் பொறுப்பான பதில் வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்ததாகவும் ஆனாலும் எதுவுமே நடக்கவில்லை என்றும் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் கூறினார்.
 
கனேமுல்ல தேவாலயத்தில் இன்று மாலை இடம்பெற்ற சிறப்பு வழிபாட்டில் மக்களுக்கு வழங்கிய பிரசங்கத்தில் பேராயர் இவ்வாறு கடும் விசனம் வெளியிட்டதுடன் மாற்று வழியை நாடவுள்ளதாகவும் கூறினார்.

அரசாங்கத்துக்குப் பல தடவை எச்சரிக்கை விடுத்ததாகவும் ஆனாலும் இதுவரை ஆறுதல் வழங்கக்கூடிய பதில் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கவில்லை எனவும் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் பாதுகாக்கப்படுவதாகவும் பேராயர் மல்கம் ரஞ்சித் கூறினார்.

பின்னணியில் இருந்தவர்கள் தற்போதும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில் கூட அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. அவர்களது பெயர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் ஒருவர் கூட விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. ஆனால் நாடகமொன்று மாத்திரமே அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆணைக்குழுவொன்றை நியமித்து, அதற்கு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கி, ஆயிரக்கணக்கானோர் சாட்சியமளித்துள்ளனர் என்றால், அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துங்கள் என்று பேராயர் கூறினார்.