வடமாகாணம்

மன்னாரில் பெரும்போகச் செய்கை ஆரம்பம்

விவசாயிகளுக்குத் தேவையான முதலாவது நீர் விநியோகத்திற்கும் ஏற்பாடு
பதிப்பு: 2021 டிச. 16 20:47
புதுப்பிப்பு: டிச. 19 20:19
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மன்னார் மாவட்டத்தில் 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படவுள்ள பெரும்போக நெற்செய்கையை முன்னிட்டு விவசாயிகளுக்குத் தேவையான முதலாவது நீர் விநியோகம் முருங்கன் கட்டுக்கரைக் குளத்தின் 11ஆம் கட்டை துருசுக்கு அருகாமையில் 26ஆம் திகதி செவ்வாய் காலை 10.30ககு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. எதிர்வரும் பெரும்போக நெற் செய்கை மன்னார் மாவட்டத்தில் சுமார் 31, 339 ஏக்கர் விஸ்தீரணத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த நிலையில் மேற்படி விவசாய செய்கைகளுக்குத் தேவையான நீர் விநியோகத்தை வழமை போன்று வட மாகாணத்தின் இரண்டாவது பெரிய குளமான முருங்கன் கட்டுக்கரைக்குளத்தில் இருந்து மேற்கொள்வதற்கு நீர்பாசனத் திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் குறித்த கட்டுக்கரைக்குளத்தில் இருந்து இவ்வருட பெரும்போக நெற்செய்கைகான நீரை கட்டுக்கரைக்குளத்தில் இருந்து மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் உள்ள உயிர்த்தராசன்குளம் 11ஆம் கட்டை துருசு ஊடாக, முதன் முதலாக விவசாயிகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையே இன்று மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் நடைபெற்றது.

நிகழ்வில் மதக்குருக்கள் மற்றும் மன்னார் மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட மன்னார் மாவட்ட நீர்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளார் என்.யோகராஜா கட்டுக்கரைக்குளத்தின் பொறியியலாளர் பி. அருள்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை தற்போது முருங்கன் கட்டுக்கரைக்குளத்தின் நீர் மட்டம் 9 அடி உயரத்திற்கு காணப்படுகிறது. மன்னார் மாவட்டத்தில் தற்போது மழை காலம் நிலவுவதால் கட்டுக்கரைகுளத்தின் நீர் மட்டம் மேலும் உயரும் நிலை உள்ளது என நீர்பாசனத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டீ மேல் தலைமையில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பெரும்போக நெற் செய்கை தொடர்பான கூட்டம் கடந்த 14ஆம் திகதி மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் முருங்கன் கட்டுக்கரைக்குளத்தில் இருந்து பெரும்போக நெற் செய்கைக்கான முதலாவது நீர்பாசன விநியோகத்தை அக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிப்பது என முடிவெடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை கட்டுக்கரைக்குளத்தில் இருந்து நீர் விநியோகத்தை மன்னார் விவசாயிகளுக்கு தொடர்ந்தும் மேற்கொள்வது எனவும் குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.