இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி

கோட்டாபயவினால் அமைச்சர் ஒருவர் பதவி நீக்கப்பட மற்றுமொரு அமைச்சர் வரவேற்கிறார்

பொருளாதார- புவிசார் அரசியல் நெருக்கடிகளைச் சமாளிக்க கையாளப்படும் உத்தி எனவும் தகவல்
பதிப்பு: 2022 ஜன. 04 22:01
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 04 23:08
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேம ஜயந்த பதவி நீக்கப்பட்ட பின்னர். அமைச்சரவையில் உள்ள ஏனைய மூத்த அமைச்சர்கள் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன அந்த அதிருப்தியை இன்று செவ்வாய்க்கிழமை தனது கல்வி அமைச்சில் வைத்து செய்தியாளர்கள் முன்னிவையில் வெளிப்படுத்தினார். கல்வி மறுசீரமைப்பு திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு முன்னாள் இராஜாங்க அமைச்சராகப் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த இன்று பதவி விலக்கப்பட்டமை தொடர்பாகச் செய்தியாளர்கள் சிலர் கேள்வி தொடுத்தபோது பதிலளிக்க மறுத்த தினேஸ் குணவர்த்தன, ஆவேசமாகக் காணப்பட்டார்.
 
சுசில் பிரேம ஜயந்த தினேஸ் குணவர்த்தனவின் நெருங்கிய நண்பர். அதேவேளை, வேறு பல மூத்த அமைச்சர்கள நேரில் சென்று சுசில் பிரேமஜயந்தவுடன் உரையாடினர். புதவி நீக்கம் குறித்துக் கவலையடைவதாக அமைச்சர் டளஸ் அழகபெருமா தெரிவித்தார்.

சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு, சிலிண்டர் வெடிப்புகள் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்களின் விலை அதிகரிப்புக் குறித்து மக்கள் வீதியில் வைத்து எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சுசில் பிரேமஜயந்த அரசாங்கத்தையும் கண்டித்து விமர்சித்திருந்தார். இதன் காரணத்தினாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பதவி நீக்கப்பட்டிருந்தார்.

இதன் பின்னணியில் ஏற்கனவே முரண்பட்டுக் கொண்டிருக்கும் விமல் வீரவன்ச, உதயம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும் பதவி நீக்கப்படுவார்களா அல்லது சுசில் பிரேமஜயந்தவின் திடீர் பதவி நீக்கம் முரண்படும் அமைச்சர்களுக்கான எச்சரிக்கையா என்பது குறித்த சந்தேகங்கள் சிங்கள சமூகவலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளன.

அதேவேளை, சுசில் பிரேம ஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலக்கப்பட்டமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த சரியான முடிவென அமைச்சர் ஜொஸ்ரன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்தப் பதவி நீக்கத்தை கோட்டாபய ராஜபக்ச ஏற்கனவே செய்திருக்க வேண்டுமெனவும் அமைச்சர் ஜொன்ஸ்ரன் பெர்ணாண்டோ மேலும் கூறினார்.

இதேவேளை, பொருளாதார நெருக்கடி மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிகளைச் சமாளிக்க கையாளப்படும் உத்தியே அரசாங்கத்துக்குள் நெருக்கடி என்ற கதைகள் வெளிவருவதாகக் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

ராஜபக்ச குடும்பத்துக்குள் முரண்பாடுகள் எதுவுமேயில்லை என்றும் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றிய பேச்சுக்களை சர்வதேச அரங்கில் இருந்து முற்றாக நீக்கம் செய்வதற்கான நகர்வுகள் உரிய முறையில் கையாளப்பட்டு வருவதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.