ராஜபக்ச ஆட்சியைக் கவிழ்த்து

புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக மைத்திரி கூறுகிறார்

ஐக்கிய மக்கள் சக்தியும் ஆட்சி அமைக்குமென்கிறார் சஜித்-
பதிப்பு: 2022 ஜன. 10 22:56
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 11 04:01
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் விரைவில் அரசாங்கம் அமைக்கப்படுமென கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். இந்த அரசாங்கம் அரசியல் பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது என்றும் ஏனைய சில கட்சிகளுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க உரையாடி வருவதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறினார். ஆனால் மைத்திரிபால சிறிசேனவுக்கு அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சக்தி இல்லையென அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
 
ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமன அரசாங்கத்தில் இருந்து மைத்திரிபால சிறிசேனவை வெளியேற்றியிருக்க வேண்டும் என்றும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் அவ்வாறான நடவடிக்கையை எடுப்பாரெனவும் அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்துக்குள் மேலும் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறத் தயாரெனவும் ஆனாலும் அரசாங்கம் தங்களை விலக்க வேண்டுமென தாம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி விரைவில் அரசாங்கத்தைக் கைப்பற்றும் என்று அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்குப் பயணம் செய்த சஜித் பிரேமதாச அங்கு செய்தியாளர்கள் முன்னிலையில் இவ்வாறு கூறினார்.

கிளிநொச்சி. முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கும் சஜித் பிரேமதாச பயணம் செய்துள்ளார். வடமாகாணத்துக்கான சுற்றுப் பணயத்தின்போது ஆட்சிக் கவிழ்ப்புப் பற்றியே சஜித் பிரேமதாச அதிகமாகப் பேசியுள்ளார்.

இதேவேளை, சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன