இலங்கைத்தீவில் நிதிநெருக்கடி, விலைவாசி உயர்வு விவகாரம்

ஹர்சா டி சில்வாவை தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கவும்

சஜித் அணி உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ நாடாளுமன்றத்தில் கூறியபோது வாய்த்தர்க்கம்
பதிப்பு: 2022 ஏப். 06 21:23
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 06 23:26
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
ஹர்சா டி சில்வாவை தற்காலிக ஜனாதிபதியாக நியமித்துத் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலக வேண்டுமென பாடசாலை மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.
 
ஹர்சா டி சில்வா நிறந்த பொருளாதார நிபணர், அவரைத் தற்காலிகமாக ஜனாதிபதி பதவியில் அமர்த்தினால் உடனடியாகத் தீர்வைக் காண முடியுமெனவும் ஹரின் பெர்ணாண்டோ கூறினார்.

இதனால் அமைச்சர்கள், அரசதரப்பு உறுப்பினர்கள் பலரும் கூச்சல் குழப்பம் விளைவித்தனர். எதிர்த்தரப்பு உறுப்பினர்களுடன் வாய்த்தர்க்கம் புரிந்தனர். சபையில் பெரும் குழப்பங்கள் எழுந்தன.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகமாட்டார் என்று அரசதரப்பு உறுப்பினர்கள் உரத்துச் சத்தமிட்டனர்.

சபை நடவடிக்கைகள் ஆரம்பித்த நேரம் முதல் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டதால் இரண்டு தடவைகள் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுப் பின்னர் ஆரம்பித்திருந்தன.

ஹர்சா டி சில்வா ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொருளியல்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.