பொருளாதார நெருக்கடி விலைவாசி உயர்வு

கொழும்பில் கோட்டாவுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள்

நாடாளுமன்றத்திற்கு முன்பாக மாணவர்கள் எதிர்ப்புக் கோசம்
பதிப்பு: 2022 ஏப். 08 22:05
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 09 22:20
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமன அரசாங்கத்துக்கு எதிராகக் கொழும்பில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. பத்தரமுல்லயில் உள்ள நாடாளுமன்றத்துக்கு முன்பாகப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலகமடக்கும் பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். மாணவர்களும் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக எதிர்ப்புக் கோசங்களை எழுப்பினர். கொள்பிட்டி லிப்ரன் சுற்றுவட்டத்துக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டது.
 
கொழும்பு- கண்டி பிரதான வீதி வழிமறிக்கப்பட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகக் கோசங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டங்களினால் கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னால் எதிர்கட்சிகள் செயற்படுவதாக அரசதரப்பு இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளது.

ஆனால் அரசியல் கட்சிகளின் பின்னணி எதுவுமேயின்றி மக்களும் பல்கலைக்கழக மாணவர்களும் தாமாகவே முன்வந்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதாக ஜே.வி.பி உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தல் கூறினார்.