வடக்குக் கிழக்கு உள்ளிட்ட

இலங்கைத்தீவில் அரச மருத்துவமனைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

மருத்துவத் தொழிற் சங்கங்கள் மனிதாபிமான வேண்டுகோள்
பதிப்பு: 2022 ஏப். 11 23:09
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 14 00:30
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில் இயங்கும் அரச வைத்தியசாலைகளில் ஐந்து வகையான உயிர்காக்கும் மருந்துகளுக்கும், 180 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவ தொழிற்சங்கங்கள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளன. வெளிநாடுகள் உடனடியாக உதவி செய்ய வேண்டுமெனவும் மருத்துவ தொழிற் சங்கங்கள் அவசர அழைப்பு விடுத்துள்ளன. மருந்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் உடனடியாகப் பகிரங்கமாக அறிவித்து உதவி வழங்கும் நாடுகளிடம் அவசர உதவி கோருமாறும் இலங்கை மருத்துவர் சங்கம் உள்ளிட்ட மருத்துவ தொழிற் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
 
அதேவேளை, சிறுவர்களுக்கான மருந்துகள் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் வெளியில் உள்ள தனியார் மருந்தகங்களில் இந்த மருந்துகள் இருந்தால் தந்துதவுமாறும் கொழும்பு பொரள்ள லேடி சிஜ்வே வைத்தியசாலை பணிப்பாளர் மனிதாபிமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் டொலர் பற்றாக்குறையினால் மருந்துப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படவில்லை.