கோட்டாபயவுக்கு எதிரான போராட்டம்

ரம்புக்கனையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி பன்னிரெண்டுபேர் படுகாயம்

நான்குபேர் நிலைமை கவலைக்கிடம்- பிரதேசத்தில் ஊரடங்கு அமுல்
பதிப்பு: 2022 ஏப். 19 21:54
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 19 22:15
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலக்குவதற்கான போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில். இன்று கேகாலை மாவட்டம் றம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டும் மேலும் நான்குபேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. மேலும் 12 பேர் காயமடைந்து அருகிலுள்ள அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருட்களின் விலைகள் கட்டுப்பாடின்றி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரம்புக்கனையில் ரயிலை வழிமறித்துப் போராடியபோதே பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
 
போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த கண்ணீப்புகைக் குண்டுகள் வீசப்படடன. தடியடிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டன. போராட்டக்காரர்களும், பெற்றோல் பவுசர் ஒன்றுக்கும் ஓட்டோ ஒன்றுக்கும் தீயிட்டனர்.

பொலிஸார் மீதும் கற்களை வீசினர். இதனையடுத்தே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

தற்போது ரம்புக்கனைப் பிரதேசத்தில் விசேட அதிரப்படையினர் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் இன்று மாலை ஆறு மணி முதல் பொலிஸ் ஊரங்கும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அம்பாந்தோட்டையில் சென்ற 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பேரணி இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பை வந்தடைந்தது. பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகள் ஜே.வி.பியின் ஆதரவுடன் நடத்திய இந்தப் பேரணி இன்று மாலை கொழும்பை வந்தடைந்தNபுhது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இருபது மாவட்டங்களில் இன்று கோட்டாபயவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. காலிமுகத் திடல் போராட்டம் தொடர்ந்தும் நடைபெறுகின்றது.