இலங்கைத்தீவில் கோட்டாவுக்கு எதிரான போராட்டத்துக்கு மத்தியில்

கட்சித் தலைவர்கள் கூட்டம்- நிறைவேற்று அதிகாரத்தை ரத்துச் செய்வது குறித்து ஆராய்வு

சபாநாயகா் தலைமையில் நடந்த கூட்டத்தில் பலரும் பங்குபற்றினர்
பதிப்பு: 2022 ஏப். 21 21:05
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 22 23:15
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலக வேண்டுமென வற்புறுத்தி, கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தலைமையில் இடம்பெற்றது. தற்போதைய பொருளாதார மற்றும் விலைவாசி உயர்வு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. ஆனால் முடிவுகள் எதுவுமே எடுக்கப்படவில்லை. நாளை வெள்ளிக்கிழமை முக்கியமான முடிவுகளை அறிவிக்கவுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்தக் கூட்டத்தில் கூறியிருந்தார்.
 
அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக கோரிக்கை விடுத்தால் ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகவுள்ளதாக கோட்டாபய ராஜபக்ச கூறியதாக கருத்து வெளியிடவில்லைக் கூறியமை தொடர்பாக சபாநாயகர் இன்று நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் விளக்கமளித்திருந்தார்.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது, 20 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்து 19 ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் இன்றைய கூட்டத்தில் பேசப்பட்டுள்ளன.

ஆனாலும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான முடிவுகள் எதுவுமே எடுக்கப்படவில்லை.

இதேவேளை, எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை பல பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அம்பலாங்கொட, பண்டாரவளை, பெலியத்த, ஹாலிஎல, மாத்தறை, மஹியங்கனை, மொனராகலை, நொச்சியாகம மற்றும் காலி ஆகிய இடங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பலாங்கொடை எல்பிட்டிய வீதியின் வத்துகெதர பிரதேசத்தில் டிப்பர் பாரவூர்தி சாரதிகள் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.