கோட்டாவுக்கு எதிரான போராட்டம்

நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதில் தாமதம்

ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கையால் குழப்பம்
பதிப்பு: 2022 ஏப். 22 22:37
புலம்: முல்லைத்தீவு
புதுப்பிப்பு: ஏப். 25 00:07
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கோட்டபாய வீட்டுக் போக வேண்டுமென வலியுறுத்தி இளைஞர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்கி நாடாளுமன்றத்திடம் அதிகாரங்களை ஒப்படைப்பது தொடர்பாகத் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. பிரதமர் மகிந்த ராஜபக்ச இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தில் உள்ள சில முக்கியமான அதிகாரங்களை உடனடியாக நாடாளுமன்றத்திற்குப் பாரப்படுத்தும் பிரேரணை ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தி மீளவும் திருத்திச் சமர்ப்பிக்கவுள்ளதாகக் கட்சித் தலைவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
 
அரசாங்கத்துக்கு எதிராகச் சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எப்போது விவாதத்துக்கு எடுப்பது என்பது தொடர்பாகக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்படுமென நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணையை பிற்போடுமாறு ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சிகளிடம் கேட்டுள்ளார்.

போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், எரிபொருட்களுக்கான விலைகள் மற்றும் சமையல் எரிவாயுக்களுக்கான விலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.