கோட்டாவுக்கு எதிரான மக்கள் போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்துக்கு முன்பாக மாணவர்கள்- பொலிஸார் மோதல்

ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க கண்ணீர்புகைக் குண்டுத்தாக்குதல்
பதிப்பு: 2022 மே 05 22:17
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 09 11:54
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்குப்போ என்ற போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், நாடாளுமன்ற வாளாகத்துக்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள் இன்று இரவு வரை நடத்திய ஆர்ப்பாட்டத்தினால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சுமார் எட்டு மணி நேரமாக இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸாரும் மாணவர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். பொலிஸார் கம்பிகளினால் அமைத்த வேலிகளை உடைத்துக் கொண்டு மாணவர்கள் நாடாளுமன்ற வீதிக்குள் நுழைய முற்பட்டபோதே மோதல் ஏற்பட்டது. கம்பி வேலிகளை உடைத்துக் கொண்டு மாணவர்கள் நாடாளுமன்றத்திற்குச் செல்லும் முதலாவது வீதிக்குச் சென்றபோது பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
 
மாணவர்கள் பொலிஸார் மீது கற்களை வீசினர். ராஜபக்ச அரசாங்கம் பதவி விலக வேண்டுமென உரக்கச் சத்தமிட்ட மாணவர்கள் கோட்டாபய மகிந்த. பசில் ஆகியோருக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தினால் கொழும்பின் முக்கிய நகரங்களான பத்தரமுள்ள, ராஜகிரிய, பொரள்ள, மருதானை உள்ளிட்ட பிரதேசங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேவேளை, நாளை வெள்ளிக்கிழமை இலங்கைத்தீவு முழுவதிலும் பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்துடன் அரசாங்கம் பதவி விலகவில்லையானால். ஏதிர்வரும் 11 ஆம் திகதி புதன்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டங்கள் இடம்பெறுமென தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.