கோட்டாவுக்கு எதிரான

போராட்டங்களை அடக்க அவசரகாலச் சட்டம் அமுல்

நாடாளுமன்ற வளாகத்துக்கு முன் மாணவர்கள் உள் ஆடைகளுடன் போராட்டம்
பதிப்பு: 2022 மே 06 23:22
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 09 13:06
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால். இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் நலனைப் பாதுகாக்கவும் அத்தியாவசிய சேவைகளைப் பேணவும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது. அவசரகால சட்டம் நடைமுறையில் இருக்கும்போது ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்துவது தடைசெய்யப்படும். ஆகவே ஜனாதிபதியின் இந்த வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி மீளப் பெறவேண்டுமென கொழும்பில் உள்ள மனித உரிமை சட்டத்தரணிகள் கேட்டுள்ளனர்.
 
இது தொடர்பாக நாளை சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள கலந்துரையாடல் ஒன்றில் மனித உரிமைச் சட்டத்தரணிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை. இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாநாட்டின்போது கடும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதாகவும் இறுதியில் பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்ச ஒப்புக் கொண்டதாகவும் லங்காதீப என்ற சிங்களச் செய்தித் தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

எதிர்வரும் திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் எனவும் குறிப்பிட்டிருந்தது. ஆனால் பிரதமரின் செயலாளர் உடனடியாகவே சமூகவலைத்தளத்தில் மறுப்பு வெளியிட்டுள்ளார்.

அதேவேளை. 148 வாக்குகளினால் மீண்டும் பிரதி சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மீண்டும் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இதேவேளை. இன்று இரண்டாம் நாளாக நாடாளுமன்ற வளாகத்துக்கு முன்பாக இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் பொலிஸாருடன் கடும் மோதல் ஏற்பட்டது. பலர் காயமடைந்துள்ளனர்.

மாணவர்கள் பலர் தங்கள் உள்ளாடைகளைக் கழற்றி பொலிஸார் அமைத்த கம்பி வேலிகளில் தொங்கவிட்டனர். நாடாளுமன்றத்தில் உள்ள கள்வர்கள் வீட்டுக்குப் போக வேண்டும் என்று கோரியே சுமார் எட்டு மணி நேரமாகப் போராட்டம் இடம்பெற்றது.

கொழும்பில் பல்வேறு பகுதிகளிலும் இன்று போராட்டம் இடம்பெற்றது. பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டத்தினால் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல் இழந்தன. போக்குவரத்துகளும் இடம்பெறவில்லை.

அரசாங்கம் பதவி விலகவில்லையானால் எதிர்வரும் பதினொராம் திகதி புதன்கிழமை முதல் தொடர் பகிஸ்கரிப்புப் போராட்டம் நடைபெறவுள்ளதாகத் தொழிற் சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.